புதுடெல்லி,
டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுமென பிரதமர் மோடி டிவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அவர் பதிவிட்டதில் நம் இந்திய நாட்டின் நெறிமுறைகளுக்கு அமைதியும் நல்லிணக்குமுமே மையமாக இருக்கக் கூடியது. ஆதலால் டெல்லி உள்ள சகோதர, சகோதரிகள் அமைதி காக்க வேண்டும். டெல்லி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் அதற்கு அனைவரும் சகோதரத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.