திருப்பூரில் புரட்சித்தலைவி பிறந்தநாளை முன்னிட்டு 72,000 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம்

  திருப்பூர்,


    புரட்சிதலைவி  ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு தொகுதியில் 72 இடங்களில் 72,000 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.



திருப்பூர் தெற்கு தொகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள வாலிபாளையம்மண்ணரை, பெரியார் நகர், காஞ்சி நகர் உள்பட 72 இடங்களில் தலா ஆயிரம் பேருக்கு என மொத்தம் 72 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென 12 ஆயிரம் கிலோ சிக்கனில், ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபத்தில் சிக்கன் பிரியாணி தயாரிக்கப்பட்டது.


இந்த பிரியாணி ஒவ்வொரு இடங்களிலும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டது.


இந்த பிரியாணி அன்னதானத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சிகளில் சார்பு அணி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், எஸ்.பி. என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், சடையப்பன், கண்ணபிரான், வேலம்பாளையம் கண்ணப்பன், எஸ்.பி.என்.ஸ்ரீதரன், தம்பி சண்முகம், ஆண்டவா பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.