ரூ.742.15 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம்
புதுடெல்லி,

 

  தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்பித்த  நன்கொடை கணக்குகள் அடிப்படையில் 2018-19 ஆம் ஆண்டில் பாஜக மூன்று மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

 



 

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு,  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டு உள்ள தகவலின்படி,

 

 இந்திய தேசிய கட்சிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை மொத்தம் ரூ.1 951.66 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

 

அதில் பெரும்பகுதி ரூ.742.15 கோடி பா.ஜனதா திரட்டி உள்ளது. இது 78 சதவிகிதம் அதிகமாகும்.

 

காங்கிரஸ் நன்கொடை ரூ.26.658 கோடியிலிருந்து ரூ.148.58 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

 

பகுஜன் சமாஜ் கட்சி  2018-19 நிதியாண்டில்  ரூ. 20,000 க்கு மேல் எந்த நன்கொடைகளையும் பெறவில்லை என்று  அறிவித்து உள்ளது.


 



தேசிய கட்சிகள் மராட்டிய  நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.548.22 கோடியையும், அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ரூ. 141.42 கோடியும், குஜராத்திலிருந்து ரூ.55.31 கோடியும் பெற்று உள்ளன.

 

நன்கொடை வழங்குவதில் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை முதலிடத்தில் உள்ளது.