ஜெர்மனியில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி

 



ஹனாவ்,


   நேற்று பிற்பகல் ஜெர்மனி நாட்டின் ஹனாவ் நகரில் மர்ம கும்பல் பார்-க்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளனர். பாரில் உள்ளவர்கள் பதற்றம் அடைந்ததால் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனால்  மர்ம கும்பல் பாரில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெர்மனி  நாட்டின் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை மர்ம நபர்களின் விபரங்களை ஜெர்மனி  நாட்டின் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. மேலும் இச்சம்பவத்தை பற்றி தீவிர விசாரனை மேற்கொள்ளபட்டு வருகின்றனர்.