சென்னை:
கடந்த 4 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் 805 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களை நிரப்ப ஊழியர்களை நியமிக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்த நிலையில். தற்போது பணியிடங்களுக்கான ஊழியர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும், பதவிக்கு ஏற்ப தகுந்த வயது உள்ளவர்களுக்கும், புதிதாக கல்லூரியை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்தது. பணியிடங்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டதாவது, சென்னை மாநகராட்சியில் மொத்தம் காலியாக உள்ள 805 பணியிடங்களில் 98 உதவி பொறியாளர்கள், 83 லைசென்ஸ் ஆய்வாளர்கள், 53 டைப்பிஸ்டுகள், 35 வயர்மேன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தவிர 100 உதவியாளர்கள், 127 துப்புரவு ஆய்வாளர்கள், 113 மகப்பேறு பிரிவு உதவியாளர்கள், 41 சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.