கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றது சீனா


பீஜிங்,


  சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து அதன் அண்டை நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கோவிட் 19  எனப்படுகின்ற கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றைய நிலவரப்படி  2,118 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 75,213 பேர் பாதிப்படைந்துள்ளார்கள். இதில் 12,000 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.


இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா வைரஸை மருத்துவர்கள் கட்டுக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக அந்நாட்டு நிர்வகம் தெரிவித்துள்ளது.


மேலும் கொரோனா பரவாமல் இருக்கவும் வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைய தொடங்கிய நிலையில் சீன மக்களிடையே நம்பிக்கை துளிர்த்துள்ளது.