விரைவில் ஆம்புலன்ஸ் டிராக்கர் செயலி அறிமுகம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


   



 

சென்னை,

 

      108 ஆம்புலன்ஸ் டிராக்கர் செயலி 2 மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

     

இச்செயலின் மூலமாக ஆம்புலன்ஸ் வரும் பாதை, ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை அறிந்துக்கொள்ள முடியும்.


 

 தமிழ்நாட்டில் கடந்த 2008 செப்டம்பர் 15-ந் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்நாள் வரையிலும் இச்சேவையால் பல கோடி மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் ஆம்புலன்ஸ் சேவைக்காக புதிதாக 200 வாகனங்கள் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 

இந்நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.