புதுடெல்லி,
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவனும், சர்வதேச தீவிரவாதியான மசூத் அசாரை காணவில்லை என்று பாகிஸ்தான் நேற்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் உளவுத்துறையினர் மசூத் அசாரை கண்டுப்பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான், மசூத் அசார் பாதுகாப்புடன் பதுங்கி உள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இச்சம்பவத்தால் உலக நாடுகள் பாகிஸ்தானை கடிந்து கொள்ள தொடங்கியது. இதில் இந்தியரசு பாகிஸ்தானை பொறுப்பற்ற நாடு என்றும் விமர்சித்துள்ளது. மேலும், மசூத் அசார் பஹவல் பூரில் பாதுகாப்பாக வசித்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உளவுத்துறை தகவலின்படி பாகிஸ்தானில் ரயில்வே இணைப்பு சாலையில் உள்ள மார்கஸ்-இ-உஸ்மான்-ஓ-அலி என்ற பயங்கரவாதக் குழுவின் பஹவல்பூர் தலைமையகத்தின் பின்னால் உள்ள வெடிகுண்டு தடுப்பு வீட்டில் மிக உயர்ந்த பாதுகாப்பில் பதுங்கி உள்ளான் என கூறப்படுகிறது.
மசூத் அசாருக்கு அறியப்பட்ட மற்ற மூன்று முகவரிகளையும் இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கவுசர் காலனி, பஹவல்பூர்; மதரஸா பிலால் ஹப்ஷி, பன்னு, கைபர்-பக்துன்க்வா; மற்றும் அதே மாகாணத்தில் உள்ள மதரஸா மஸ்ஜித்-இ-லுக்மான், லக்கி மார்வாட்.