ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு

சென்னை, 


 சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் அதிகமாக பயணிகள் வருகை தரும் இடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இது அண்மையில் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


     


ஊருக்கு செல்பவர்களை வழியனுப்ப உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ரயில் நிலைய வளாகத்திற்குள் வருவார்கள். ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தவிர்த்து மற்றவர்கள் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது.


இதுவரை ரூ.10தாக இருந்த ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்போது, தற்காலிகமாக 5 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.15க்கு விற்கப்படுகின்றது. 


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கோடை காலம் என்பதால் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து கடும் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில். ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜுன் 30ம் தேதி வரை பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. 


இந்த திடிர் விலையேற்றம் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.