தேனி கம்பம் அருகே மகனை கொலை செய்த தாய்

தேனி  மாவட்டம் கம்பம் அருகே மகனை வெட்டிக் கொலை செய்த தாய். போலிஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 



தேனி,


    தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி சாலையில் பொட்டம்மன் துறையில் முல்லைப் பெரியாறு செல்லும் பகுதியில் சரக்கு மூட்டையில் வாலிபர் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கிடந்தது.


    இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஒரு பெண் ணும் ஒரு வாலிபரும் சாக்குமூட்டையில் கொலை செய்யப்பட்டவரின் உடலை வீசி சென்றது தெரியவந்தது.


அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் அந்தப் பெண் நந்தகோபாலன்சாமி தெற்குவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா மனைவி செல்வி என்பதும், அவருடன் வந்தது அவரது இரண்டாவது மகன் விஜய் பிரசாத் என தெரியவந்தது.


அதைத்தொடர்ந்து காவல்துறை தனிப்படை செல்வியிடம் விசாரணை நடத்தியதில் நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்ட தாய்.


   இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் கூறுகையில் மகனை கொலை செய்த செல்வியின் கணவர் ராஜா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பிறகு செல்வி தனது இரண்டுமகன்களான விக்னேஸ்வரன் விஜய் பிரசாத் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் என்ஜி னீயரிங் பட்டதாரி.


மேலும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


அதன் பிறகு தனது சொந்த தேவைக்கும் பழக்கத்துக்கும் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். நண்பர்களுடன் பழக்க வழக்கமும் இருந்தது இதனால் தினமும் வீட்டில் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.


இதன் காரணமாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் இவர்களுடன் பேசுவதை தவிர்த்து வந்தனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஸ்வரனின் தம்பி விஜய பிரசாத் காதல் திருமணம் செய்துள்ளார். தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். தனக்கு திருமணமாகாத நிலையில் தனது தம்பி திருமணம் செய்து கொண்டதால் தன்னை அவமதித்து விட்டதாக விக்னேஸ்வரன் நினைத்தார்.


இதனால் தம்பியிடமும் தாயிடமும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கை பார்த்த விஜய் பிரசாத்தின் மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தனது மகனை கொலை செய்ய செல்வி முடிவு செய்தார். அதன்படி போதை தலைக்கேறிய நிலையில் வந்த விக்னேஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அந்த உணவில் விஷம் கலந்துகொடுத்து மகனை கொன்றுள்ளார்.


அதன்பிறகு தனது மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்ற மகன் என்றும் பாராமல் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அரிவாளால் வெட்டி தனித்தனியாக எடுத்தார். உடலை மட்டும் சாக்குப்பையில் கட்டி தொண்டமாந்துறை தடுப்பணையில் வீசியுள்ளார். முன்னதாக தலையை வீரப்ப நாயக்கன் குளம் அருகில் உள்ள கால்களை காந்தி நகருக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளார்.


தீயணைப்புத் துறையின் உதவியுடன் காவல்துறை மீட்டனர். ஆனால் கைகள் மற்றும் கால்களை தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் உடல் பாகங்களை தேடுவதை நிறுத்தி விட்டு இரண்டாவது நாளாக காவல்துறை தேடி பார்த்து கைகால்களை மீட்டனர்.


மேலும் செல்வி கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொலையில் உடல் பாகங்களை மறைக்க மேலும் இரண்டு பேர் உடந்தையாக இருந்துள்ளது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே செல்வியின் இரண்டாவது மகன் விஜய பிரசாத் செல்வியின் அண்ணன் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது எனவே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.


மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையான மகனை வெட்டி கொன்று விட்டு, உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டும் அளவிற்கு செல்வி துணிந்தது