சட்டமன்ற முற்றுகை போராட்டம் நிறைவு

 

சென்னை;

 

    நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சட்டமன்ற முற்றுகை போராட்டம் நிறைவடைந்தது.  போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் அமைதியாக கலைந்து செல்ல தொடங்கினர். 

 

இன்னும் 24 மணி நேரத்திற்குள் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தார்கள்.


 

இதை தொடர்ந்து தலைமைச்செயலகம் முழுவதும் 5 காவல் துணை ஆணையர்கள் தலைமையில், 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடைபெற்ற சேப்பாக்கத்தில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 

சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. நேப்பியார் பாலம் வழியாக தலைமைச் செயலகம் வழியே செல்ல கூடிய பேருந்துகள் சிவானந்தா சாலையில் அனுப்பப்படுகின்றன.