மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

       


சென்னை,

 

இன்று தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் சட்டசபை கூட்டத்தில் 110-வது விதியின் கீழ்  முதல்- அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும்  என கூறினார்.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1992-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டத்தை விரிவு படுத்தப்படுத்தல், தொட்டில் குழந்தை திட்டம்,
சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம், பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் தொடங்கப்பட்டன.

 

அதே போல, வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன.


 

மேலும் அவர் 2003-2006 ஆண்டில் முதல்வராக இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது.