தலையங்கம்- மனித நேயம் மறைந்ததா

               மனித நேயம் மறைந்ததா!


இந்த உலகம் என்கின்ற பல உயிர்களின் தோட்டத்தில் மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவது குறைந்து மனிதனை மனிதனே அழித்து வாழும் சமுதாயம் உருவாகிவிட்டது. எம்மதத்தையும் இணைக்கும் ஓரே கோடு மனித நேயமே, கடவுள் இல்லை என்று கூறும் நார்த்திகனும் விளம்பும் ஒரே மந்திரம் அன்பே சிவம் தான். இப்படியாக அன்பின் வடிவில் உருவாகிய மனித நேயத்தை மனிதனே மறப்பது மிகுந்த வேதனைக்குறியது.



நம்மிடம் தோன்றும் அன்பும், தேசப்பக்கியும், இரக்க குணமும் கரைந்தவிட்டது. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு மனித நேயம். மனிதர்களிடம் மட்டுமல்லாது நம்மை அன்றாட போஷிக்கும் இயற்கையிடமும் நாம் மனித நேயத்தை காட்ட மறுத்துவிட்டோம். கதிர்வீச்சுகளால் வரும் பாதிப்புகள் அறிந்தும் வலது கையில் கைபேசியும், இடது கையில் மடிக்கணிணியும் வைத்து கொண்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் நெகிழியின் வளர்ச்சி பாதையில் இயற்கையிடம் நேயம் காட்ட மறுத்துவிட்டோம், நம் சுற்றுப்புறத்தை மாசு இல்லாமல் பார்த்துக் கொள்வது கூட மனித நேயம் தான்.



அன்பில் விடியட்டும் நம் வாழ்க்கையின் சூரியன். தயக்கமில்லாமல் மற்றவர்களிடத்தில் நாம் காட்டுமே அன்பே, பெற்ற தாயின் புனித அன்பிற்கும் மேலானது. மனித நேயத்தை மறக்கிறவன் மனிதனல்ல….. நாம் மனிதர்களாய் இருக்க பழகுவோம். எல்லா எதிர்ப்புகளையும், மனித நேயம் என்கின்ற கவசத்தை அணிந்து அன்பின் பாதையில் வெல்வோம்.