சென்னை,
கோடை காலம் தொடங்கியதால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
சராசரியாக தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னையில் சப்ளை செய்யப்பட்ட போதிலும், அது மக்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவேதான், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி நீரை ரயில் மூலம் 50 டேங்கர்களில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் நிரப்பி சென்னைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
வட சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது.
இதன்பிறகு, பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், கொளத்தூர், கொரட்டூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ரயில் மூலம் கொண்டு வந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நீர்வளத்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தினமும் 4 ட்ரிப் வீதம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் கொண்டு வர முடியும் சூழ்நிலை உள்ளது.
குடிநீர் டேங்கர்கள் "கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தேவையான மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் டேங்கர்களின் விநியோகத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம்.
இப்போது சென்னை நகரம் முழுக்க டேங்கர்கள் தினமும் 12,000 ட்ரிப் செல்கின்றன. அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், "என்று தெரிவித்துள்ளார்.
இத்தனை மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டும் ஏன் சென்னையில் தட்டுப்பாடு நிலவுகிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புக்கின்றனர்.