சென்னை- டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள், அலுவலர்களின் வருமானம் மற்றும் சொத்துகளை கணக்கெடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு பணி யிடங்களை நிரப்ப அனைத்து வகையான தேர்வுகளையும் நடத்தி வருகிறது. குரூப்4 தேர்வு முறைகேடு, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு என அடுக்கடுக்கான தேர்வு முறைகேடுகள் தெரிய ஆரம்பித்துள்ளது.
எனவே, இம்முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகின்ற நிலையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் வருமானம் மற்றும் சொத்து கணக்கை சேகரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், டி.என்.பி.எஸ்.சி. வேலைக்கு வருவதற்கு முன்பு எவ்வளவு சொத்து இருந்தது? வேலையில் சேர்ந்த பிறகு இப்போது எவ்வளவு சொத்து உள்ளது? என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.