கரூர் மாவட்டம், வீரராக்கியம் அருகே குளத்துப்பாளையம் திருச்சி கரூர் தேசிய நெடுஞ் சாலையில் சென்டர் மீடியன் மீது வேன் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் காரைக்கால் மாமாதம்பி மரக்காரவவீதியை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் முருகப்பாண்டியன்(38) இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 18 பேருடன் டெம்போ வேனில் காரைக்காலிருந்து கொடைக்கானல் மற்றும் கேரளாவிற்கு சுற்றுலா சென்று விட்டு ஊருக்கு திரும்பியுள்ளனர்.
அவர்கள் வந்த வேன் நேற்று காலை 5 மணியளவில் குளத்துப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வெல்டிங் ஒர்க் ஷாப் அருகே வந்தபொது டிரைவர் துக்க கலக்கத்தில் இருந்ததால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது.
இதில் முருகப்பாண்டியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரேம் குமார் ( 33 ) , சுகன்யா(32), தமிழரசி(52), சுமித்ரா பத்மினி(38), லட்சுமி (34) உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும், இவர்களை கரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த முருகப்பாண்டியனின் உடல் பிரேத பரிசோத னைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. விபத்து குறித்து வெள்ளியணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.