ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, காவல்துறை பாதுகாப்பு மற்றும் மின் இணைப்பு என 318 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் ஈமசடங்கு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.17,000 ம், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.2500ம், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2000 வீதம் 02 நபருக்கு ரூ.4000ம் ஆக மொத்தம் 04 நபாகளுக்கு ரூ.23,500த்தை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி, வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.ஸ்ரீவள்ளி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.