திரையரங்குகளில் இன்று திரௌபதி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இதுகுறித்து திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் நாங்கள் இப்படத்தின் விளம்பரத்திற்கென பெரிதாக செலவழிக்கவில்லை.
ஊடகங்களை கூட அழைத்து இப்படத்தை பற்றி பேசவில்லை. சமுக ஊடகங்களில் மட்டும் பகிர்ந்துக் கொண்டோம். இருப்பினும் அஜித் தன்னிடம் ஒரு நல்ல படம் தன்னைத்தானே மக்களிடம் கொண்டு பேசி, எடுத்துக் கொள்ளும் என்று சொல்லி இருந்தார். அதுபோல தான் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அவர் கூறிய பல வசனங்கள் என் வாழ்க்கையில் நிறைவேறி உள்ளது அதனை இப்படத்திலும் நான் உணர்கின்றேன் என்று தெரிவித்தார்.