பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

கடலூர்,


   தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டமானது 01.12.2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவி தொகை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6000 மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.



இத்திட்டத்தின் கீழ் 34.41 இலட்சம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2431.59 கோடி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.


தற்போது நான்காம் தவணை பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு வலைதளத்தில் பெயர் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, நான்காம் தவணை பெறாத விவசாயிகள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.