வாஷிங்டன்,
வருகின்ற 24 மற்றும் 25ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் வருகை தர உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகளை அகமதாபாத் நகரில் அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
சாலைகளை மீண்டும் உருவாக்குவது முதல் அனைத்து அழகுபடுத்தும் பணிகளிலும் அகமதாபாத் மாநகராட்சி இறங்கியுள்ளது.
இந்திய பயணம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று பேசுகையில், உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா ஆதலால் இந்தியாவுடன் அமெரிக்க இணைந்து தொழில் செய்வது கடினம். எனவே வர்த்தக ரீதியாக பெரிதளவு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இல்லை.
இருப்பினும், நான் இந்திய பிரதமர் மோடியை அதிகம் நேசிக்கிறேன். இந்திய பயணத்தைக் குறித்த அதிக எதிர்ப்பார்ப்புகள் எனக்கு உண்டு என்று தெரிவித்தார்.