ராமநாதபுரம்,
இந்தியா முழுமையிலும், தமிழகத்தை தவிர்த்து விற்பனையிலும், பயன்பாட்டிலுள்ள கள் எனப்படும் இயற்கையான பனம்பால் மீதான தடையை நீக்கி பனை விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட விபத்து காப்பீட்டு தொகை, மானியம், உதவித்தொகை, உபகரணங்கள் மற்றும் பனை ஒலை பயிற்சி மூலம் வைக்கப்பட்டுகிறது.
தமிழக பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, உடல் நலத்திற்கு ஏற்ற இயற்கை பானாமாக “கள்” எனப்படும் இயற்கையான பனம்பால் மிது உள்ள தடையை நீக்கி, அனுமதி வழங்கிடவோ அல்லது ஆவின் பால் விற்பனை நிலையங்களின் பால் விற்பனை செய்வது போன்று “கள்” விற்பனையையும் அரசே ஏற்று நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டியும்.
தமிழகத்தில் அழிந்துவரும் பனை மரங்களை காத்து, பனை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், அரசின் தரிசு நிலங்கள். நீர் வரத்து பகுதிகளில் கரைகள், குளங்கள், ஏரிகளின் கரைகள் மற்றும் தமிழக வனப்பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி பனை மரங்கனை பராமரித்து நம் வருங்கால சந்ததிகள் பயன் பெற நடவடிக்கை வேண்டி மனு சமர்ப்பிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் உடல் நலத்தை பாதுகாப்பிலும் முக்கிய காரணியாக பனைமரங்கள் இருந்துள்ளது.
பனை தன்னுடைய வேர்கள் மூலம் மழை நீரை பூமிக்கு அடியில் சேமிக்கும், வறட்சி காலத்தில் பூமியின் ஆழமான பகுதியில் 1500 அடிக்கு கீழ் இருக்கும் நீரை மேல் பகுதிக்கு பனம்பாலாக கொண்டு வரும் தன்மை இயறகையாகவே பனைக்கு உண்டு.
உலகளவில் 108 நாடுகளிலும், இந்தியா முழுமையிலும் தமிழகத்தை தவிர்த்து விற்பனையிலும் ,பயன்பாட்டிலுள்ள கள் எனப்படும் இயற்கையான பனம்பால் மீதான தடையை நீக்க வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
மேலும் இதன் மூலம் 50 லட்சத்திற்கு மேலான பனை தொழிலாளர்கள் மற்றம் வருங்கால சந்ததியர் பயன் அடைவார்கள் என்று மனு அளிக்கப்பட்டது.