பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.
உலகின் மிக மதிப்பு வாய்ந்த கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி விதித்த தடையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (நேற்று) ரத்து செய்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே குழப்பமான மன நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால். இணையத்தள வளர்ச்சியில் தொழில்நுட்ப ஆதிக்கம் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றது. பண பரிவர்தனைகள் மற்றும் சமூக வலைதளங்களில் நடக்கும் பண மோசடிகள் எண்ணிலடங்காமல் இருப்பதால். பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் பண மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், பிட்காயின் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக குறிப்பிட்டு நீதிமன்றத்தில் பிட்காய்னுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது பிட்காய்னை தடை செய்வதற்கு சரியான காரணமற்றது என்று நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், நீதிபதி எஸ். ரவிந்திர பட் மற்றும் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் கொண்ட அமர்வு தெரிவித்து பிட் காயின் மீதான தடையை நீக்கிவுள்ளது.
அனைத்திற்கும் தீதும் நன்றும் இருப்பது போல பிட் காயினின் மதிப்பு தங்கம் விலை போன்றது. எப்போது அதிகரிக்கும், எப்போது குறையும் என்பது தெரியாது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு பிட்காயினின் மதிப்பு 9,000 டாலர்களில் இருந்த தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டது. சமீபத்திய ஏற்றத்தின்படி இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாயாக உள்ளது.