திமுகவின் தங்கத் தாரகன்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர்) அன்பழகன்  தனது 97 வயதில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.


அன்பழகனின் இயற்பெயர் ராமையா. இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிரமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19ம் தேதி. 1922 ம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் ஹானர்ஸ் படித்தார். 1944ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசியராக பணியாற்றினார்.


திராவிடச் சிந்தனைகள் மேல் இருக்கும் ஆர்வத்தால் தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார். கல்லூரியில் படிக்கும் காலத்திலே திராவிடம் பற்றிய பற்று இவருக்கு அதிகம் இருக்கும்.1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ந் தேதி) வெற்றிச்செல்வி என்பவரை மனம்முடித்தார். இவர்களுக்கு அன்புச்செல்வன் என்ற மகனும், இரண்டு மகள்களும் உண்டு. வெற்றிச் செல்வி மறைவிக்கு பின்பு சாந்த குமாரி என்பவரை தனது) வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். 


புத்தகம் வாசிப்பதிலும், எழுதுவதிலும் அதித ஆர்வம் கொண்டவர். அவரின் படைப்புகள் அனைத்தும் தமிழ் சமூகத்திற்கு ஏற்புடையாதாக இருந்தது அதில் இனமொழி வாழ்வுரிமை போர், உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழின காவலர் கலைஞர், தமிழ்வானின் விடிவெள்ளி தந்தைபெரியார் உள்பட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்.


திராவிடத்தின் மேல் அவருக்கு திராத தாகம் இருந்ததால் திராவிட கட்சியான திமுகவில் தனது வாழ்நாள் முழுவதும் கழித்தார். அவர் திமுகவிற்கு ஆற்றிய தொண்டுகள் எண்ணிடங்காதவை. அண்ணாவின் நம்பிக்கை நங்கூரமாக இருந்தார். அண்ணா அன்பழகனை 'பேராசிரியர் தம்பி' என அழைத்தார்.


1957 1962ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை) உறுப்பினராக இருந்தார்.


1967 1971ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார்.)


19711984ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,


19841989ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,


1989 1991ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி) எம்.எல்.ஏ.வாகவும்,


1996 2011ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.


19711976ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.


19891991, 19962001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். 2006 2011ம் ஆண்டு வரை) நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.


1977ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.


இறுதியாக 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தோல்வியை தழுவினார்.


அவரது அரசியல் வாழ்வில் ஒரு முறை மேல் சபை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராக 8 முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளார்.


கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்பு திமுகவிற்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த பேராசியர் அன்பழகன் நம்மோடு இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கின்றது.