வேலூரில் நாய் இறந்து 10 நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்தாத அவல நிலை...!

வேலூர்,


வேலூர் மாவட்டம், கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி கொண்டு உள்ள இந்த நேரத்தில் வேலூர் மாநகரம், காட்பாடி 1வது மண்டலம், மற்றும் காட்பாடி வட்டம், குடியாத்தம் ரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு ஓர் பஸ் நிலையம் புதியதாக கட்டப்பட்டு உள்ளன.



இந்த நிலையத்தில் ஓர் நாய் இறந்து கடந்த 10 நாட்களாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அவரவர்கள் மூக்கின் மேல் கை வைத்து கொண்டு செல்கிறார்கள். அதிகாரிகளின் மெத்தன போக்கில் உள்ளதால் வேலூர் மாவட்ட 1வது மண்டலம் வைரஸ் காய்ச்சல் பரவுமோ என்ற பீதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.