கடலூர்,
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனோ வைரஸ் பரவாமல் இருக்கும் பொருட்டு ஏற்கனவே மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களான உணவுபொருட்கள், பால், மருந்து போன்ற நிறுவனங்களைத் தவிர்த்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரியும் வணிக வளாகங்களை 31 ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் |அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்