கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பந லத்துறை சார்பாக 108 ஆம்புலன்சில் பணிபுரியும் மருத்துவ பணியாளர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கவசத்தை மாவட்ட கலெக்டர் பிரபாகர் வழங்கினார். கிருஷ்ணகிரியில் மொத்தம் 24 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 24 ஆம்புலன்ஸ்க ளிலும் விழிப்புணர்வு பதாகை ஒட்டப்படுகிறது.
கொரோனா வைரஸ்க்கு மட்டும் தனி ஒரு 108 ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவம் னையிலும் போதிய சிகிச்சை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவர். பரமசிவம், துணை இயக்குநர் மருத்துவர். கோவிந்தன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி ராமன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் டைட்டன் ஆகியோர் உடன் இந்தனர்.