சென்னை ,
கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி பள்ளிகல்லூரிகள் மூடப்ப ட்டன. 31ந்தேதி வரை தொடர் விடு முறை அளிக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் மிதந்தனர். விடுமுறை காலத்தை எப்படி கழிப்பது? என்று சிந்தித்தும் வந்தனர்.
விடுமுறை என்றாலே குழந்தைகளை வீடுகளில் சமாளிப்பது என்பது பெற்றோருக்கு கடினமான காரியமாகவே இருக்கும். இதை உணர்த்தும் வகையில் தொடர் விடுமுறை காரணமாக வீடுகளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கூறி ஒரு வீட்டில் 2 குழந்தைகள் சண்டை யிடுவது போன்று சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த நிலையில் மாண வர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.
அந்த அடிப்படையில் பல்வேறு பள்ளிகளில் ஏற்கனவே வாங்கி வை த்திருக்கும் மாணவர்களின் பெற்றோர் வாட்ஸ் அப் எண்ணை கொண்டு ஒரு குரூப் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வாட்ஸ்குரூப் மூலம் பள்ளி வகுப்பறையில் நடத்தப்படுவது போலவே மா ணவர்களுக்கு பாடங்களை படிக்க ஆசிரியர்கள் அறிவு றுத்துகிறார்கள். இதை கண்காணிக்கவும் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அந்த வாட்ஸ் அப் குரூப்பில், 'அன்பார்ந்த பெற்றோரே. உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு ப்பாடங்களை முறையாக செய்ய உதவுங்கள். இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள் ளது. இதனால் உற்சாகத்தில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை ஜாலிக்கு வேட்டு வைக்கப்பட்டு உள்ளது.