சென்னை,
இந்தியன் 2 படப்பிடிப்பில் எற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜென்டில்மேன், முதல்வன், ஐ உள்ளிட்ட படங் களை இயக்கியவர் டைரக்டர் ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச் சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பில் கடந்த 19ந் தேதி நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங் கரிடம் போலீசார் விசாரணை நடத்தயதை அடுத்து முன்னணி நடிகர் கமலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று சென்னை வேப்பரி குற்றப்பிரிவு அலவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டுள்ளனர்.