சென்னை,
தமிழகத்தில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டபேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ சாமி மற்றும் திமுக குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன் இருவரும் உடல்நிலை குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார்கள்.
இந்நிலையில், தமிழக சட்டபேரவையில் 2 இடங்கள் காலியாகி உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விரைவில் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.