சரபங்கா திட்டம் மூலம் 200 டி.எம்.சி. தண்ணீ ர் கிடைக்கும்- முதல்வர் உறுதி 

சேலம்,


தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சரபங்கா திட்டம் மூலம் 200 டி.எம்.சி. தண்ணீ ர் கிடைக்கும் என முதல்வர் உறுதி. 


      தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 511 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, 100க்கும் மேற்பட்ட ஏரி குளங்களுக்கு நீர் நிரப்பப்படும் என்று  கூறினார். மேலும் காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். இதற்காக ஆந்திர முதலமைச்சரை தமிழக அமைச்சர்கள் 2 பேர் நேரில் சந்தித்து எனது கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீ ர் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.



சேலம் மாவட்டத்தில் ரூ.565 கோடி மதிப்பிலான, மேட்டூர் அணையின் மழைக் கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடி நிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர்வழங்கும் திட்டத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.


இத்திட்டத்தினால் சரபங்கா வடி நில பகுதியில் வறட்சியான 100 ஏரிதாலுகாக்களில் உள்ள 4238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.


இந்த விழா எடப்பாடி இருப்பாளி ஊராட்சி மேட்டு ப்பட்டி ஏரியில் நடந்தது. விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழுத்தில் பச்சை துண்டு அணிந்து விவசாயி போல் வந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் விழாவில் பேசினார்.