தேனி,
தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினராக அம்மா தமிழ் பீடத்தின் நிறுவனர் ஆவடி குமார் கலந்து கொண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெ.மஹபூப்பீவி தமிழ் கல்வி பாணியை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தனர்.