24 மணி நேரம் மகப்பேறு தொடர்பான புகார்கள்

நீலகிரி,


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாநிலத்தில் இருந்து வருகை புரிந்து கட்டிடம், உணவகங்கள் மற்றும் தேயிலை எஸ்டேட்களில் பணிபுரிபவர்கள், அவசர தேவைகள் மற்றும் மருத்துவ உதவிகள் தேவையிருப்பின் புகார்கள் தெரிவிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலராக முகமது குதுரலுல்லா, மாவட்ட, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், உதகமண்டலம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


புகார்கள் ஏதேனும் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்.9688551120 அதேபோல், மாவட்டத்தில் கற்பமுற்ற நிலையில் உள்ள தாய்மார்கள் அவசர மருத்துவ தேவைகள் ஏதேனும் தேவையிருப்பின் புகார் தெரிவிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலராக சுகன்யா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர், உதகை என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மகப்பேறு தொடர்பான புகார்கள் தெரிவிக்கப்பட வேண்டிய எண்.7094324908 மற்றும் 8778211426 - மேலும், மேற்கண்ட எண்கள் தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்.1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.