திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாவமாக இல் திருப்பூர், மார்ச்.20திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளல் தொடர்பாக திருப்பூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 31-03-2020 வரை ரத்து செய்யப்படுகிறது எனவும், மேலும் எதிர்வரும் 26-03-2020 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பெதப்பம்பட்டி உள்வட்டம், மூங்கில் தொழுவு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் மற்றும் 27-03-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது எனவும், பொதுமக்கள் தங்களது குறைதீர் மனுக்களை அஞ் சல் வழி மூலமாகவோ அல்லது மாவட்ட ஆட்சியரின் வாட்-ஆப்(97000 41114) எண்ணிற்கோ அனுப்பலாம் எனவும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்படுகிறது