பெண்ணை உயர்வு செய்

     


மகளிர் தினம் மார்ச் 8ல் வரப்போகிறது. நாடெங்கும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. பெண் உரிமை. பெண் விடுதலை என்ற வாசகங்கள் வானுயர எட்டவே 19ம் நூற்றாண்டாகி விட்டது. அதற்கு முன்பாக பெண்களுக்கு சொத்துரிமை இல்லை, மறுமண உரிமை இல்லை , இப்படித்தான் நாடு முழுக்க ஏன் உலகம் முழுக்க இருந்தது. ஆடு, மாடு, வீடு போல பெண்ணும் ஆண்களின் உடமையாக நடத்தப்பட்டாள்.


எல்லா மதங்களும் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான கருத்துக்களையே திணித்தன. பெண்களுக்கு பல மதங்களில் வழிபாட்டு முறை கூட மறுக்கப்பட்டுத்தான் இன்றளவும் உள்ளது என்பது வருத்தத்திற்குரியது.


மகாகவி பாரதி போன்ற பலர் மகளிர் பெருமையை உயர்த்தி பாடினர். ஆனாலும் இன்று வரை பெண் அமைச்சர், பெண் பத்திரிகையாளர், பெண் அதிகாரி என்றே அழைக்கப்படுவது அவமானத்திற்குரியது.


பெண்கல்வி, பெண் வழிபாட்டுரிமை, பெண் சொத்துரிமை என்பதெல்லாம் பல நூறு வருட போராட்டத்திற்கு பின் தான் கிடைத்தது. பெண்களின் முன்னோடி வரிசையில் ஔவை, சரோஜினிநாயுடு, இந்திரா காந்தி, ஆகியோரோடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும் என்பது தமிழகத்தின் பெருமையாகும்.


இதை மாற்றி அமைத்து முதலமைச்சராக பெண்கள் நலனுக்காக பலதிட்டங்களை தீட்டியவர் ஜெயலலிதா. இன்னும் பெண் உடைக்க வேண்டிய தடைக்கற்கள் இமாலயம் போலவே உள்ளது. நம் தாய்க்கு, மனைவிக்கு, சகோதரிக்கு, மகளுக்கு கிடைக்க வேண்டிய கௌரவங்களை பெற்று தர வேண்டியது ஆண்களின் கடமையாகும்.