பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை; 1000 ரூபாய் அபராதம் நீதிபதி தீர்ப்பு

 தேனி


தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட காக்கிலிச்சியின்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த நடராஜன் 68 வயது என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியலுக்கு உட்படுத்திய வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தமபாளையம் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் குற்றம் ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டார்.



இந்நிலையில் ஜாமீனில் சிறை யிலிருந்து வெளிவந்து தேனி மாவட்ட மகிளா நீதிமன் றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இறுதி விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் அபராத தொகை கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து குற்றவாளி காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் மதுரை சிறைக்கு கொண்டு சென்றனர்.