இத்தாலியில் இருந்து பயணம் செய்து டெல்லிக்கு வந்த ஒருவருக்கு கொரானா பதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் துபாயில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்துள்ள ஒருவருக்கும் கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (பிஐபி) உறுதி செய்துள்ளது.
இருவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று பிஐபி சற்றுமுன் வெளியிட்ட செய்தி குறிப்பு உறுதி செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.
கொரானா பரவாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது.