புது டெல்லி,
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போரட்டத்தில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடையே நடந்த வன்முறைக்கு காரணமான 903 பேர் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 46 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மெது மெதுவாக இயல்பு நிலைக்கு டெல்லி திரும்பி வருவதால் போராட்டம் நடந்த இடங்களில் போலிசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடந்த இடத்தில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்ந்துள்ளது.
போராட்டம் வன்முறையாக மாற காரணமானவர்களை விசாரிக்கவும், விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.