கண்ணமங்கலம்,
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணம் ங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 75 குடும்பங் களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு 10 கிலோ முதல் 15 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. மேற்கு ஆரணி ஒன்றிய குழு துணை தலைவர் வேலாயுதம், மாவட்ட கவுன் சிலர் பூங்கொடி திருமால் ஆகியோர் கொங்க ராம்பட்டு நரிக்குறவர் காலனியில் உள்ள 75 குடும்பங்களுக்கு 25 கிலோ கொண்ட 25 அரிசி சிப்பங்களை இலவசமாக வழங்கினர்.
கொங்கராம்பட்டு பஞ்சாயத்து தலைவர் சுகுணா நாராயணன், துணைத் தலைவர் மாதவன், பஞ்சாயத்து செயலாளர் ஜானகிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.