பான்கார்டுடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெடு நாளாகவே பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கோரி வருமான வரித்துறை அறிவித்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது மார்ச் 31-ந் தேதி வரை கால அவகாசத்தை நீடித்துள்ளது. இனி காலம் தாமதிக்க கூடாது எனவும், அனைவரும் குறித்த காலத்தில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். காலம் தாழ்த்தி மார்ச்31ம் தேதிக்கு பின்பு பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பவருக்கு ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும்.