சென்னை,
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 சதவீதம் நோயாளிகளில் 97 சதவீதம் மக்கள் குணமடைந்து விடுவார்கள் என கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் பவித்ரா வெங்கடகோபா லன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட முனைவர். பவித்ரா வெங்கடகோபாலன் தனியார் தொலைகாட்ச்சிக்கு அளித்த பேட்டி உயிரி ஆயுதம் ( bio weapon) உருவாக்கும் போது இந்த வைரஸ் வெளியானதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இயற்கையால் படைக்கப்பட்ட ஒரு பயங் கரமான வைரஸை விட செயற்கையான பயங்கர மான வைரஸை இதுவரை யாரும் உருவாக்கியது இல்லை , அதனால் இது ஆய்வகத் தில் உருவாக்கப்பட்ட வைரஸ் இல்லை என பதிலளித்துள் ளார். கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பேருந்து நிலையத்தில் பரவுகிறது என்பது தான் உண்மை.
வௌவாலில் இருந்து சார்ஸ் வைரஸும், ஒட்டகத்திடமிருந்து மேர்ஸ் வைரஸும் பரவுகிறது. தற்போதுள்ள கொரோனா வைரஸ் வௌவாலிடம் இருந்து பரவியிருக்க 75 சதவீத வாய்ப்புகள் உள்ளது. புள்ளிவிவரத்தின் படி பார்த்தால் வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டவர்கள் 100 சதவீதம் எனில் 97 சதவீதம் சதவீதம் மக்கள் வைரஸ் தொற்றுலிருந்து குணமடைந்துவிடுகின்றனர்.
மேலும் இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 வயது கீழ் உள்ள குழந்தைகளும், கர்ப்பிணிகளும் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய், சுவாச கோளாறு பிரச்சனை இருப்பவர்கள், 60 வயது க்கு மேல் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தொற் றுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நிலையத்தில் கொரோனா இஞ்சி, பூண்டு, நிலவேம்பு கசாயம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று கூறுகி றார்கள், ஆனால் அது இன் னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. நன்றாக சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது.
மேலும் அதிகம் வெயில் அடிக் கும் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவாது என்பது உண்மை கிடையாது. அதை யாரும் நம்ப வேண்டாம். கைகளை சுத்தமாக வைத்து க்கொண்டாலே கொரோனா பரவுவதை தவிர்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
பவித்ரா, அமெரிக்காவின் அரிஜோனா அரசுப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியும் டாக்டர் பட்டமும் பெற்றவர். அவரது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு கரோனா வைரஸ் குறித்ததுதான் என்பது சிறப்பு.