குறையும் ஆன குறையாது!

ரலாறு காணாத விதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 35 டாலராக குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிதளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொது மக்கள் எதிர்பார்த்த நிலையில் பெட்ரோல் விலை 31 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73.02 ரூபாயகவும், டீசல் விலை 27 காசுகள் சரிந்து லிட்டருக்கு ரூ.66.48 ஆக விற்கப்பட்டது.


கச்சா எண்ணெய் விலையோ அதிபாதாளத்தை தொட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பது மக்களிடையே கேள்விக்குறியாகி உள்ளது. முதல் முறையாக இப்போது தான் இப்படி விலையை குறைக்காமல் விற்கப்படுகின்றதா என்றால் இல்லை.


கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 105 டாலராக கச்சா எண்ணெயின் விலை உயர்த்தப்பட்ட போது பெட்ரோல் 75  ரூபாய்க்கும், டீசல் 61 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதே போல் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 74 டாலராக கச்சா எண்ணெயின் விலை குறைக்கப்பட்ட போது பெட்ரோல் 81 ரூபாய்க்கும், டீசல் 70 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


இப்படி கச்சா எண்ணெய் விலை சரிவின் போதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்காமல் விற்கப்பட்டுள்ளது. உண்மையில் பெட்ரோல், டீசல் விலை எப்படி நிர்ணாயிக்கப்படுகின்றது என்ற குழப்பம் சமானியர்களிடையே இன்றும் நீடித்து கொண்டுள்ளது.


35 ரூபாய்க்கு வாங்கப்படும் 1 லிட்டர் கச்சா எண்ணெய், இறக்குமதி விலை, சுத்திகரிப்பு செலவு, எண்ணெய் நிறுவனங்களுக்கான லாபம், போக்குவரத்து செலவு எல்லாம் சேர்த்து 8 ரூபாய் உயர்த்தப்பட்டு 43 ரூபாயாக விற்கப்பட வேண்டும்.


ஆனால் 73 ரூபாயாக விற்கப்படுகின்றது. இடையே உள்ள 30 ரூபாய் தான் தற்போது மத்திய மாநில அரசுக்கு நாம் கட்டும் நுழைவு வரி, கலால் வரி, வாட் வரி என்று 50% பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கின்றது.


இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இந்தியா 5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை சாத்தியமாக்க முடியாது.