வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
9வது நாளாக போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு 4:50 மணிக்கு தொடங்கிய நோன்பு பின்னர் மாலை 6 மணிக்கு வடைமா வந்திருந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒன்பதாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில், வாணியம்பாடி மக்கள் வேலூர் மக்கள் உங்களோடு இருக்கக்கூடிய என்னை நாடாளுமன்ற உறுப்பினராக வியர்வை தேர்ந்தெடுத்தீர்கள்.
அதிகமான வாக்குகளை கொடுத்து நீங்கள் தான் உண்மைக்கான எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று என் முதுகில் தட்டி பாராளுமன்றத்தில் பேசுமாறு அனுப்பினீர்கள். வாழ்நாள் முழுவதும் என் தந்தையார் என்னை சொல்லி வளர்த்தது நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது. நீங்களும் ஒன்றுதான் என் பெற்ற தாயும் ஒன்று தான். என் தாய் தந்தையருக்கு ஒரு பழி ஏற்படும் என்றால் மனிதனாக இருக்க மாட்டேன். மிருகமாக கூட மாறுவேன்... காந்தி வழியில் வந்தவன் உங்களுடைய போராட்டம் உங்களுடைய கூக்குரல் இது உங்களுக்கான போராட்டமல்ல, எங்களுடைய பின்னால் வரக்கூடிய தலைமு றைக்கான போராட்டம்.
இந்த போராட்டத்தில் நீங்கள் வெற்றியடைய வேண்டும் என்றும், எனக்கு பிறப்பு சான்றிகம் உள்ளது. என் தந்தை துரைமுருகன் பிறப்பு சான்றிதழில் இல்லை. கல்வி சான்று தான் உள்ளது. அவருடைய தந்தை காலத்தில் இல்லை. ஆம்பூர் வாணியம்பாடி வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த இடத்தில் கணக்கெடுப்பு நடத்தினால் இந்த பகுதியிலேயே வாழ வியர்வை சிந்தி உழைத்த அவர்களுக்கு அகதி பட்டமா இந்த போராட்டம் உண்மைக்கான போராட்டம், இந்த போராட்டம் வாழ்வா தாரத்திற்கான போராட்டம், இந்த போராட்டம் உங்கள் குடியுரிமை காண போராட்டம், இந்த போராட்ட குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும்.
வரும் 2ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து குடி உரிமை சட்டத்திற்கு எதிராக எதிர்த்து நிற்போம் என்று பேசினார்.