இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் பங்கை வகிக்கின்றது நம்பிக்கை வாக்கெடுப்பு. நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது ஆட்சி புரியும் கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நடைமுறை.
இந்த நடைமுறை அரசியல் கட்சிகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. கடந்த வருடம் கர்நாடகாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் முக்கிய இளம் தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தது மத்திய பிரதேசத்தில் கடுமையான அரசியல் குழப்பங்களை உருவாக்கி உள்ளது.
காங்கிரசில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா ரஜினாமா செய்த சில மணி நேரங்களில் ஜோதிராதித்யா ஆதரவாளர்களான காங்கிரசின் எம்.எல்.ஏ க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் கணப்பொழுதில் கமல் நாத் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 22 பேர் ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துவிடும்.
இதனால், சபாநாயகர் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ க்களையும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். விளக்கம் அளித்த 22 எம்.எல்.ஏ க்களில் 6 எம்.எல்.ஏ க்கள் ராஜினாமாவை சபா நாயகர் ஏற்றுக் கொண்டர். மீதமுள்ள 16 பேர்களின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.
இதனால் மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான உறுபினர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 75ன் படி அவையில் பெரும்பான்மை இருக்கும் வரை மட்டுமே ஒரு அமைச்சரவை பதவியில் நீடிக்க முடியும். இதனால், பேரவையில் கமல் நாத் ஆட்சி தொடர நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதனால் ஆட்சி மாற்றம் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து 1 வருடம் கூட முழுமை பெறாத நிலையில் மீண்டும் அரசியிலில் இதே போன்ற சூழ்நிலை உருவாகியதால் மக்களுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிகளின் மேல் உள்ள நம்பகதன்மை குறைந்துவிட்டது.
இது போன்ற நிகழ்வுகளால் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் கேள்வி குறியாகின்றது. நம்பிக்கை வாக்கெடுப்பால் தேர்தலில் சாமானிய மக்கள் அளித்த வாக்குகளின் கண்ணியம் காக்கப்படாமல் போகின்றது வேதனைக்குறியது. இது போல நிகழ்வுகள் இனி நடக்கமால் இருப்பது தான் மக்களின் எண்ணமாக உள்ளது.