ஆபாச நடனத்தை தடை செய்ய காவல் கண்காணிப்பாளரிடம் மனு

வேலூர்,


வேலூர் மாவட்டத்தில், கோவில் மற்றும் விழாக்களில் நடனமாடி தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வரும் தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் ஒன்று கூடி, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சட்ட விரோதமாகவும் உள்ளூர் அரசியல் மற்றும் காவல் துறை உதவியுடன் நடைபெறும் ஆபாச சட்ட நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று மனு அளித்தனர்.


ஆபாச நடனங்களை தடை செய்து உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதும், இது போன்ற நடனங்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாய் நடைபெறுவதும் அதனை காவல் துறை, உள்ளூர் அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அழுத்தத்தால் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இதற்கென்றே சில தரகர்கள் வெளி மாநில பெண்களை அழைத்து வந்து ஆபாசமான உடைகளை கொடுத்து நள்ளிரவல்  நடனத்தை நடத்துகின்றனர்.



நடனங்களை பார்க்கும் இளைஞர்கள் பிறகு பாலியல் சீண்டல்களிலும், பலாத்கார செயல்களிலும் ஈடுபட்டு வாழ்க்கையில் தடம்புரள்கின்றனர்.


தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் சங்கத்தினை தொடங்கியவரும் தற்போதைய ஆலோசகருமான பூபதி தெரிவிக்கையில், நாங்கள் சுமார் 2000 நடன கலைஞர்கள் கடந்த 30 ஆண்டுகளாக முறையான நடன நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.


இந்த தொழில் தான் எங்கள் வாழ்வாதாரமே நடனத்தை தவிர வேறெந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது. இதில் வரும் வருமானத்தை கொண்டே எங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.


தற்போது இந்த ஆபாச நடன குழுவினரால் எங்கள் வாழ்க்கையே நொடிந்து போய் உள்ளது. தரகர்களாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி குமார், சேலம் சண்முகம் , ஆம்பூர் சங்கராபுரம் சுரேஷ், ஈரோடு பள்ளிபாளையம் பிரகாஷ், சிவகங்கை வேல்முருகன், காவேரிப்பட்டனம் செந்தில் ஆகியோர் செயல்படுகின்றனர். என்று தெரிவித்தார்.