மக்கள் பணி தொடர்கிறதா?

உள்ளாட்சி அமைப்புகளில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதவிக்கு வந்து விட்டனர். அடிப்படை பிரச்சனைகளான சீரான சாலை, குடிநீர், சுகாதாரம் நீர் நிலைகளை பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்கு இன்னமும் மக்கள் அதிகாரிகளையே அணுக வேண்டிய நிலையே நீடிக்கிறது.


     


உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னும் செயல்படாத நிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செயல்படத்தொடங்கி விட்டார்களா? அவர்கள் செயல்படுவதில் என்ன இடையூறு உள்ளது. அவர்களின் செயல்பட்டதின் விளைவு பயன் என்ன? காந்தி கனவு கண்ட கிராமராஜ்யம் நவீன தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி என்ன மாறுதல்களை கொண்டு வரப்போகிறார்கள். எதிர்பார்ப்புகள் ஏராளம் எப்போது நிறைவேறும் காத்திருக்கிறார்கள் மக்கள்.