நெய்வேலியில் இலவச பாடசாலை துவக்கம்

நெய்வேலி,


  நெய்வேலி டவுன் சீப்பை தலைமை இடமாக கொண்டு வீ.தாமரைச்செல்வன் தலைமையில் மக்கள் சேவை இயக்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 


இந்த அமைப்பு கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நாடகங்கள், மற்றும் என்எல்சி சிஎஸ்ஆர் அமைப்புடனும் இணைந்து பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.



அதன் அடிப்படையில் நெய்வேலி டவுன் சீப்பில் வட்டம் 30ல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் காண்ட்ராக்ட், ஒப்பந்த தொழிலாளர்கள்கூலி வேலை செய்பவர்கள், நடைபாதை, சிறு கடை வியாபாரிகள் பெரும்பாலும் ஏழை மக்கள் வசித்து வரும் பகுதியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் மாலை நேர இலவச பாட சாலை துவங்கப்பட்டு இயக்கத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று தரப்படுகிறது.


கடந்த மாதத்தில் இந்த அமைப்பினர் இலவச திருமணம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.