கடலூர்,
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் TRV.S. ரமேஷ் தனது கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்த ஒரு இடத்திலும் திட்டக்குடி விருத்தாசலம் நெய்வேலி பண்ருட்டி குறிஞ் சிப்பாடி மற்றும் குறிப்பாக மாவட்டத் தலைநகரான கடலூரிலும் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என்றும் பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப் படுத்தியும் ஆளும் கட்சியான அதிமுகவின் அலட்சியப் போக்கினால் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படு வதாகவும் இது சம்பந்தமாக மத்திய நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைமூலமாக ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்மேலும் தனது தொகுதி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளிக்குமாறு பிரதமரை கேட்டுக்கொண்டார்.