அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தாஞ்சவூர்,


அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 04.02.2020ம் தேதி காலை 10.00 மணியளவில் நடந்தது. இதில் முக்கிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.


கோரிக்கை நூறு நாள் வேலை செய்த மக்களுக்கு வழங்கப்படாத நான்கு மாதம் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் 100 நாள் வேலை செய்யும் அனைவருக்கும் பாரபட் சமின்றி வேலை வழங்குவது, 100 நாள் வேலைக்கு மத்திய அரசு வழங்கிய கூலியை குறைக்காமல் வழங்கிடவும், குறைக்காமல் வழங்கிடுதல், வேலை நாட்களை 250 நாட்களாக உயர்த்தி வழங்க கோரியும் , 250 நாட்களை உயர்த்தி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். சிபிஐ (வி) மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார்.


வி.தொ.ச.மாவட்ட செயலாளர் கே.பக் கிரிசாமி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட ஒன்றிய நிர் வாகிகளான வி.மாலதி, து.கோவிந்த ராஜீ, எஸ்.ஞானமாணிக்கம், N.G.அந்தோணிசாமி, K.நாகலிங்கம், L.ராமராஜ், A.ராஜகுமார், T.காளிதாஜ், A.ஜான் பீட்டர், S.கருப்பையா, S.பஞ்சவர்ணம், K. அமுல்ராஜ், G.செல்வி, K.மங்கையர் கரசி, R.ராஜேந்திரன், R.ராஜலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.