சென்னை :
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நபருக்கு கொரானா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.