நாமே நமக்கு


இந்த ஆண்டு பிறப்பதற்கு முன்பே இந்தியர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டது போல இந்தியா வளர்ச்சி பாதையில் வானளவு உயரும் வருடமாக 2020ம் ஆண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நமது நாட்டின் வளர்ச்சி இந்நாள்வரைக்கும் கானல் நீராகவே காட்சியளிக்கின்றது.


2020ம் ஆண்டின் தொடக்கம் மக்களின் போராட்ட களத்தில் துவங்கியது. சென்ற மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தை எதிர்த்து நடந்த போராட்டம், வன்முறையாக வெடித்து பல உயிர்களை வேட்டையாடியது.


அதனை தொடர்ந்து தற்போது, சீனாவில் பரவிய கொரானா இந்தியாவை தாக்கியதால் 5 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை கொரானா 70 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்நோயால் 3,000 பேர் பலியாகினர். மேலும் 89,000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.


கொரானா நோயை தடுப்பத்தற்கும், பாதிப்படைந்தவர்களை குணப்படுத்துவதற்கும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாற்று மருந்து கண்டுப்பிடிக்கும் பணியில் அமெரிக்க பயோடெக் நிறுவனம் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு கொண்டு இருகின்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் கொரானா நோயால் பாதிப்படைந்தவர்களை குணப்படுத்துவதற்கான மருந்து உபயோகிப்பதற்கு வெளி யிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


இந்நோய் அதிவேகத்தில் பரவுவதால் பொது வெளியில் மக்கள் அதிகமாக பயணிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்றும் அண்டை நாடுகளுக்கு அத்தியாவசியமாக பயணிக்க வேண்டாம் என்றும் இந்திய சுகாதார துறை கேட்டு கொண்டுள்ளது. கொரானா இந்தியாவை பெரிதளவு பாதிக்கவில்லை என்றாலும் நாம் மிகவும் முன் ஏற்பாடுகளுடன் செயல்பட்டால் நம்மை காத்துக் கொள்ள முடியும். நம்மை காப்பது நம் கையில் சிந்தித்து செயல்படுவோம்.